8 ஆயிரம் கோடி அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடை – இராஜாங்க அமைச்சர் !

Saturday, July 21st, 2018

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோ~ன் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தித் துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் இலங்கையின் தலைமை அமைச்சர் செயலகம், இறுதிக் கட்டப் பேச்சு நடத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: