610 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத் திறனாளிகளும் துணுக்காயில்!

Wednesday, August 8th, 2018

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் 610 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத்திறனாளிகளும் காணப்படுகின்றனர் என பிரதேச செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் துணுக்காய் பிரதேசத்தில் 32 வரையான கிராமங்களை உள்ளடக்கிய 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 3942 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 3942 குடும்பங்களிலும் 610 வரையான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகக் காணப்படுகின்றன.

இந்தக் குடும்பங்களில் அதிகமானோர் அன்றாட வருமானங்கள் இன்றியும் தொழில் வாய்ப்புகள் இன்றியும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும் யுத்தத்தின் போது காணாமல் போன கணவன்மாரை இழந்த நிலையிலுமே அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை யுத்தத்தின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட மற்றும் விபத்துக்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட 311 வரையான மாற்றுத் திறனாளிகளும் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கை தொடர்பான வெளிப்புற தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டது சீனா - சீன பிரதிநிதி ஜெனீவாவில் தெரிவ...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்...
அதிபர் சேவையில் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு குழு நியமனம் - கல்வி அமை...