3,360 மணித்தியாலங்கள் ஏமாற்றப்பட்டுள்ளேன் – கீர்த்தி தென்னக்கோன் அதிருப்தி!

Sunday, June 10th, 2018

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பான அறிக்கையின் இணைப்புகளை வழங்காது ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சபாநாயகர் இருவரும் தன்னை 3 ஆயிரத்து 360 மணித்தியாலங்கள் ஏமாற்றியுள்ளனரென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பாக அறிக்கையின் இணைப்புகளை தன்னிடம் வழங்குமாறு சபாநாயகர் ஜனாதிபதியின் செயலாளர், தேசிய கணக்காய்வுத் திணைக்களம் மற்றும் வேறு நிறுவனங்களிடம் கோரியிருந்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தென்னக்கோன் 2018 ஜனவரி 18 ஆம் திகதி முதல் இன்று வரையான 140 நாட்களாக இணைப்புகள் கிடைக்கவில்லையெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மேற்படி பிணைமுறி விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டபவர்களது விபரங்களைத் தருமாறு அர்ஜீன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவருக்கும் தான் கடிதம் அனுப்பியிருந்ததாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இந்த ஆவணத்தின் இணைப்புகளைத் தன்னிடம் கையளிப்பதாக சபாநாயகரும் ஜனாதிபதியின் செயலாளரும் உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை அவ்விணைப்புகள் கிடைக்கவில்லையென்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: