3 நாடுகளுக்கு வீசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு!

Tuesday, July 18th, 2017

பாகிஸ்தான், சிரியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு வீசா வழங்க முன்னர் அவர்களை பற்றி சோதனை நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

தேசிய பாதுக்காப்பு கருதி இந்த தீர்மானம் எடுத்திருப்பதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்த்துள்ளார்.

பாகிஸ்தான், சிரியா, கமரூன், ஐவரிகோஸ்ட், எகிப்து, கானா மற்றும் நைஜீரியா ஆகிய ஏழு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் மேலைத்தேய நாடுகளுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து அந்நாடுகள் தமது பாதுகாப்பை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையும் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: