25 வீதம் பெண் வேட்பாளர்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்!

faizer_musthafa_001 Tuesday, November 14th, 2017

எதிர்வரும் உள்ளு+ராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25 வீத பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளு+ராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான திருத்தச் சட்டத்தின்படி அந்தத் தேர்தல்களின் போது தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களில் 25 வீத பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே 25 வீதம் பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் சட்ட விரோதமானதென்று கருதப்படும். அவ்வாறான வேட்பு மனுக்கள் தேர்தல்கள் அதிகாரிகளினால் நிராகரிக்கப்படும், என்று அவர் கூறினார்.