23 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாண புகையிரதம் இடைநிறுத்தம்!

Tuesday, October 17th, 2017

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று குறிப்பிடப்படவுள்ளது.

Related posts: