ரணில் – சஜித் பேச்சுவார்த்தை தோல்வி!

Wednesday, September 11th, 2019


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட இருந்த நிலையில், நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: