படையினருக்கு ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு!

Friday, August 23rd, 2019

பேஸ்புக் பார்ட்டிகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் கடுமையான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்று தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர உத்தரவிட்டுள்ளார்.

தென்மாகாண பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றபோது அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் –

தென் மாகாணத்தின் சுற்றுலா மையங்களில் பேஸ்புக் பார்ட்டி என்ற பெயரில் இளைஞர், யுவதிகள் முறைகேடாக நடந்து கொள்ளவும், போதைப் பொருள் பாவனையை பரவலாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் போது எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய வேண்டாம்.

நான் ஆளுநராக இருக்கும்வரை தென் மாகாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எவ்வகையிலும் இடமளிக்கமாட்டேன் என்றும் ஹேமால் குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts: