ஹம்பாந்தோட்டை துறைமுகப்பணிகள் ஆரம்பம்!

Sunday, December 10th, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டபணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சைனா மேர்ச்சன் போர்ட் ஹோல்டிங்ஸ் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய முதலீட்டுப் பெறுமதியில் 30 சதவீத நிதியை வழங்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெற்றது.

300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலை இதன்போது வழங்கப்பட்டது.இலங்கை அரசாங்கததுடன் ஒன்றிணைந்து இலங்கை துறைமுக அதிகாரசசபையும், சைனா மேர்ச்ன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் கடந்த ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட ஹம்பாந்தோட்டை நிவாரண உடன்படிக்கை  உத்தியோகபூர்வமான நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசாங்கமும், தனியார் துறையினரதும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உடன்படிக்கைக்கு அமைவாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


சந்திரிகாவின் நல்லிணக்க வடிவத்தை ஏற்றுக்கொண்டார் மைத்ரிபால சிறிசேன !
1,000 தாதியருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து வெற்றிடம்!
வெட்டியி குழியில் எலும்பு எச்சங்கள் - அதிர்ச்சியில் அச்சுவேலி!
2 மாதங்களுக்குள் மரண தண்டனை – அதிர்ச்சியில் போதைப்பொருள் குற்றவாளிகள்!
வடக்கில் பாடசாலைகளிலிருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!