வேலை தேடி யாழ். நகர் வரும் வன்னி மாவட்ட சிறுவர்கள் !

Tuesday, February 20th, 2018

யாழ். நகர்ப் பகுதியில் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக சமுகநலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நகர்ப் பகுதியில் இடம்பெறும் நடைபாதை வர்த்தகம் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவது அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக வறுமை காரணமாக இடைவிலகியோரே இவ்வாறு வேலைகளில் குடும்ப சூழ்நிலை காரணமாக இணைய முயல்வதாகவும் அவ்வாறானவர்களை குறைந்த சம்பளத்தில் சில வர்த்தகர்கள் இணைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட பாடசாலை இடை விலகிய சிறுமிகள் கூட வேலைவாய்ப்பு கோரி நகர வர்த்தக நிலையங்களுக்கு வரும்

சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறானவர்கள் விரைவாக இனம்கண்டு பாடசாலை மீள் இணைத்தல் செயற்பாடுகளை உரிய தரப்பினர் மேற்கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தடுத்து நிறுத்தப்படாவிடின் அவ்வாறான சிறுமிகள் வழிதவறிப் போகும் சந்தர்ப்பங்களும் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு நகரப் பகுதியில் வேலைவாய்ப்பு கோரிவரும்

சிறுவர்களை வர்த்தகர்கள் இனம் கண்டு அவர்களை உரிய தரப்பினூடாக நடவடிக்கை எடுத்து அவர்களின் எதிர்காலத்துக்கு வழிவகை செய்ய வேண்டுமென சமூக நலன்விரும்பிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts: