வெளிநாட்டில் பணிபுரிவோர் அவதானம் : இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்!

Friday, May 4th, 2018

சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது என்றும் அதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை சமூக வலைத்தள குழுக்களில் இணைத்துக் கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு பணம் சேகரிக்கப்படுகின்றது என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த மோசடி சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிட வேண்டும் என்றும் முறையீட்டாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts: