விலை அதிகரிப்புக்கு உடனடி அனுமதி கிடையாது – வணிகத்துறை அமைச்சர்!

Thursday, February 22nd, 2018

நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்கக் கோரி விண்ணப்பித்துள்ள போதிலும் உடனடியாக அனுமதி வழங்கப்படாது என கைத்தொழில்வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த எரிவாயுவின் விலையின் ஏற்ற,இறக்கம் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்பிற்கு அமையவே தீர்மானிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அட்டவணையொன்றினை தயாரிக்கும் பணியினை தற்போது வாழ்க்கைச் செலவு குழு ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு என்பது மக்களின் அத்தியாவசிய தேவையாகும். சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துவருவதுவழமையான நிகழ்வாகும்.

மேலும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts: