விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் – அமைச்சர் பைசர் முஸ்தப்பா!

Saturday, July 22nd, 2017

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.தேர்தல் முறையில் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வது குறித்தும், பெண்களுக்கு 25 வீத வாய்ப்பளிப்பது குறித்தும் பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம், பேச்சுகளையடுத்து நிறைவேற்றப்படும். சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 55 நாட்களில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.60 வீதம் தொகுதிவாரி அடிப்படையிலும், 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளன. தற்போது அனைத்துத் தடைகளும் நீங்கியுள்ளதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: