வித்தியா படுகொலை:  அடுத்த நடவடிக்கை யாழ். மேல் நீதிமன்றத்தில்!

Saturday, May 6th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வுப் பத்திரம் மே மாதம் 12 ஆம் திகதிக்கு முதல் சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அரச சட்டவாதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிப்பதற்காக இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியிடம் உறுதியளித்தார்.

இதையடுத்து 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடித்து உத்தவைிட்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, அவ்வுத்தரவை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.