வித்தியா கொலை: உடந்தையாக இருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் மாட்டினார்!

imageproxy (1) Friday, October 6th, 2017

வித்தியா படுகொலையுடன் தொடர்புபட்டதாக பேசப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் வீரதுங்க மற்றுமொரு சர்சையில் சிக்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை காப்பாற்றும் விதமாக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக லலித் வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லலித் வீரதுங்க, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தென்னிலைங்கையில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகளையும் காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் வீரதுங்க ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2011ஆம் ஆண்டு தங்காலை பிரதேச ஹோட்டலில் பிரித்தானிய நாட்டு குராம் ஷேய்க் கொலை செய்யப்பட்டு அவரது காதலி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என லலித் வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபத்திரனவுக்கு ஆதரவாக முன்னாள் முறையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் வீரதுங்க செயற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் 2013 ஆம் ஆண்டு தெரணியகல நூரி தோட்டத்தில் தோட்ட அதிகாரி நிஹால் பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணையை ஒழுங்கான முறையில் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவரான அனில் சம்பிக்க என்பவருக்கு ஆதரவான செயற்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியான அனில் சம்பிக்க உட்பட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


பாரதப் பிரதமரின் சந்திப்பை தமிழ் தரப்பினர் பயன் மிக்கதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவான...
தேர்தலை நடாத்தாவிட்டால் அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகுவோம் - மஹிந்த!
எனது பதவி நீக்கம் திட்டமிட்ட ஒரு சதி - டெனீஸ்வரன்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!
சங்கானை மண்டிகைக் குளம் சுற்றுலாத்தளமாக்கப்படும் - வலி.மேற்கு பிரதேச செயலாளர்!