விஜயகலாவின் அடியாளால் அப்பாவி பொதுமகனுக்கு அச்சுறுத்தல்!

Tuesday, October 10th, 2017

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய் பாதுகாவலராக கடமையாற்றும் தமிழ் பொலிஸ் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள தனது வீட்டில் மரம் வெட்டுவதற்கு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூலிக்கு ஒருவரை அழைத்து சென்று வேலை வாங்கியுள்ளார். வேலை வாங்கியவர் அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஊதியத்திற்குப் பதிலாக வீட்டில் வெட்டப்பட்டுள்ள மரத்தினை எடுத்துச் செல்லுமாறு அந்தப் பொலிஸ் கூறியுள்ளார்.

அதற்கு அனுமதிப் பத்திரம் எடுக்க வேண்டும். இல்லையேல் பொலிஸார் கைது செய்வார்கள் என தொழிலாளி கூறியுள்ளார். இதற்கு கடுமையான தொனியில் குறித்த கூலித்தொழிலாளியினை எச்சரித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்த தொழிலாளி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  குறித்த எச்சரிக்கையை விடுத்த 27 வயதான தினேஸ் என்ற விஜயகலாவின் அடியாளான பொலிஸ் உத்தியோகத்தருக்கு  எதிராகவே இவ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டள்ளது.

Related posts: