விசாரணைக்கு தயார்! முன்னாள் இராணுவத் தளபதி அறிவிப்பு!

ஜனாதிபதியானாலும் உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு முன்னிலையாவது அவசியம் என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனக்கு மீண்டும் அழைப்பு விடுத்தால் விசாரணைக்கு தாம் முன்னிலையாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாடாளுமன்றம் என்பது கௌரவத்திற்குரிய இடமாகும். அதன் உத்தரவுகளை இராணுவ அதிகாரியானாலும், நாட்டின் பிரஜையானாலும் கைகொள்ள வேண்டும். அதனால் மீண்டும் ஒர் அழைப்பு வந்தால் நான் முன்னிலையாவேன்.
இராணுவத்திலிருந்து நான் ஓய்வு பெற்றிருந்தாலும் இராணுவத்தின் சட்டப்பிரிவில் ஆலோசனை பெற்று விசேடமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைப்படி அதில் கலந்துகொள்வேன்.
எனினும் விசாரணை இடம்பெறுகின்ற போது நாட்டின் பிரஜை என்ற வகையில் விசாரணையில் கலந்துகொள்வது அவசியம். ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தெரிந்துகொண்டேன். இந்த விவகாரத்தில் யாருக்கும் எதனையும் மூடிமறைப்பதற்கான அவசியம் கிடையாது. யார் மீதும் விரல்நீட்டக்கூடிய சந்தர்ப்பமும் இல்லை.
இதுவொரு விசாரணை. ஆகவே விசாரணைக்கு ஒத்துழைப்பதற்கு நம் அனைவரும் இடமளிக்க வேண்டும்” என கூறினார்.
Related posts:
|
|