விக்கிக்காக மக்கள் அணி திரளவில்லை – சொல்கிறார் கஜேந்திர குமார்!

Thursday, July 6th, 2017

முதலமைச்சராக இருப்பதற்காகத்தான் தனது வீட்டின் முன்பாக மக்கள் திரண்டார்கள் என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருதுவாரானால் அது தவறு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேிசய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை:

மாகாணசபையில் முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எங்களுக்கு நன்மை இல்லை. எங்களுக்கு ஓர் அமைச்சுப் பதவியும் இல்லை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சரியான கொள்கையை வெளிப்படுத்தி, மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கொள்கையில் இருப்பதால் பழிவாங்கப்படுகின்றார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே நோக்கம்.

அதற்காகத்தான் அவருக்கு ஆதரவாக அணி திரண்டோம். மற்றவர்கள் செயற்பட்டது தொடர்பில் இன்று கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் மக்களை அணி திரட்டவில்லை. அணி திரண்ட மக்கள்தான் மீண்டும் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்று கூடினார்கள் என்று விக்கேனஸ்வரன் நினைத்தால் அது தவறு என்றார்

Related posts: