வாக்குச் சீட்டுக்களை படம் பிடித்தால் கைது!

Saturday, February 3rd, 2018

எதிர்வரும் உள்@ராட்சி சபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாக்குச் சீட்டுகளைப் படம் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது படக் கருவிகள் மூலம் வாக்குச் சீட்டுக்களைப் படம் எடுப்பது அல்லது அவற்றை விநியோகிப்பது சட்ட விரோதச் செயற்பாடாகக் கருதப்படும்.

இவ்வாறானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: