வாக்காளர் இடாப்பு பிரதிகளை பரிசீலித்து உறுதிப்படுத்துவது அதிகாரிகளது கடமை!

Sunday, January 21st, 2018

உங்கள் நிலையத்துக்குரிய வாக்காளர் இடாப்பு பிரதிகள் உங்கள் நிலையத்துக்கு உரியதா எனப் பரிசீலித்து உறுதிப்படுத்துவது மூத்த தலைமை தாங்கும் அலுவலரது தலையாய கடமை என யாழ்ப்பாணம் செயலக தேர்தல்கள் அதிகாரி க.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறும். அதற்கு முதல்நாள் 9 ஆம் திகதி அன்று மூத்த தலைமை தாங்கும் அலுவலர்கள் உரிய நேரத்திற்கு சமூகமளித்து பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலரை சந்தித்து தங்களது நியமனக் கடிதம், அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.

அதன்பின் உங்களுக்குரிய பொலிஸ் அலுவலர்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுடன் சென்று உங்களுக்குரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளவும். மேலும் வாக்களிக்க வருவோரை வலிதான கடவுச்சீட்டு, சாரதி அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் பரிசீலித்து அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் தினத்தன்று காலை 6.45 மணிக்கு சமூகமளித்த முகவர்கள் பரிசீலிப்பதற்கு இடமளித்த பின்னர் உரிய முறையில் பூட்டி சிவப்பு நாடாவால் கட்டி சீல் இடப்பட வேண்டும். முகவர்கள் விரும்பினால் சீல் (சின்னம்) ஒட்ட அனுமதிக்கலாம் என்றார்.

Related posts: