வவுனியாவிலுள்ள அரியாலை ஆராதனைக்கு சென்றவர்களிற்கு இரண்டாம் கட்ட பரிசோதனை!

Friday, April 17th, 2020

வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால் இரண்டாம் கட்டமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்கம் இருக்கின்றதா என்பது தொடர்பாக சோதனை செய்வதற்கான இரத்த மாதிரிகளைச் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் காத்தான்கோட்டம், ஓமந்தை, புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடமே குறித்த இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் அவை மேலதிக பரிசோதனைகளுக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

Related posts: