வழமைக்கு திரும்பியது தொடருந்து சேவைகள் – பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவிப்பு!

Tuesday, January 12th, 2021

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலும் சில தொடருந்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

அதனடிபபடையில் கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 36 தொடருந்து சேவைகளே இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன..

இதன்படி பிரதான தொடருந்து மார்க்கத்தின் 20 தொடருந்து சேவைகளும், கரையோர தொடருந்து மார்க்கத்தின் 12 தொடருந்து சேவைகளும், வடக்கு மற்றும் களனிவெளி தொடருந்து மார்க்கத்தின் ஊடாக 4 தொடருந்து சேவைகளும் இன்றுமுதல் மீள ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: