வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லையென மக்கள் சுட்டிக்காட்டு!

Thursday, June 1st, 2017

நாட்டின் சீரற்றகாலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லையெனமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகபாதிக்கப்பட்டமக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவை க்கப்பட்டுள்ளநிலையில்,வழங்கப்படும் நிவாரணங்கள் உரியமுறையில் கிடைக்கப்பெறவில்லை

அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப் பெறுவதில் தாம் பலத்தசிரமங்களை எதிர்கொள்வதாகமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணமற்றும் உதவிப்பொருட்களை அந்தந்த மாவட்டங்களின் அனர்த்தமுகாமைத்து வமத்தியநிலையங்கள் ஊடாகமுன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மக்களால் இவ்வாறுகவலைதெரிவிக்கப்பட்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இதனிடையேவெள்ளம் மற்றும் மண்சரிவுஅனர்த்தம் காரணமாகமொத்தமாகஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறுபாதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 643 பேர் 368 தற்காலிகமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts: