வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!

Friday, June 8th, 2018

வறட்சி நிவாரணத்தை பெற்றுத் தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இரணைமடுக்குளம், புதுமுறிப்புக் குளம் ஆகிய குளங்களின் நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பயிர்ச் செய்கையினை வெற்றிகரமாக மேற்கொள்வதுடன் கால்நடைகளுக்கான நீரினை பேணுவது குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக குளங்களில் உள்ள நீரினைப் பாதுகாத்து நிலத்தடி நீரினைப் பேணுதல் தொடர்பிலும் கூட்டத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் 2016, 2017 ஆம் ஆண்டுகளின் வறட்சியின் தொடர்ச்சி தற்போதும் எதிர்கொள்ளப்படுகின்றது. எனவே வறட்சி நிவாரணத்தினை பெற்றுத் தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts: