வர்த்தககேந்திர நிலையமாக இலங்கை திகழ்ந்தது – அமைச்சர் மங்களசமரவீர !

Tuesday, October 31st, 2017

வர்த்தகத்துறை கேந்திர நிலையமாக இந்துமா சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை முக்கியத்துவம் பெற்றிருந்தது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக சர்வதேச வர்த்தகத்தில் முன்னெடுத்தல் என்ற தலைப்பில் கொழும்பு சினமன் ஹிறான்ட் ஹோட்டலில் என்ற வர்த்தக செயலமர்வு நேற்று ஆரம்பமானது.

அவுஸ்ரேலியாவின் உதவியுடனும் உலகவங்கியின் உதவியுடனும் இலங்கை வர்த்தக பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு இ இரு நாட்களை கொண்டதாக நாளை வரை இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலத்திற்கேற்ற வகையில் இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் மிகவும் பொருத்தமான நேரத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கு என்னை அழைத்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஹட்சிசனிற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

 நவீன தொழில்நுட்பத்துடன் தனது பொருளாதார வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதில் வெற்றிகண்டுள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையுடன் அந்த அனுபவங்களை பகிந்துகொள்வதற்கு முன்வந்ததையிட்டு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts: