வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு பேரம்!  

Saturday, June 17th, 2017

இந்திய அரசியல் மற்றும் தென் பகுதி அரசியல் போன்று என்னிடம் பேசப்படுகின்றது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் சிலர் தொடர்பு கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிற்கு வருமாறும் கேட்கிறார்கள். குறிப்பாக என்னிடம் தொடர்பு கொண்டு அமைச்சுப்பொறுப்பை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், அமைச்சுப் பொறுப்புக்கு ஆசைபட்டு குறித்த செயற்பாட்டில் நான் இறங்கவில்லை. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இறங்கியுள்ளேன். அற்ப சொற்ப அமைச்சுப்பதவிக்காக நான் நீதியை கொன்றுவிட்டு வர முடியாது. நடந்த பிழைகள் என்ன? என்பதினை ஏற்றுக்கொண்டு நகர வேண்டுமே தவிர, இரண்டு பகுதியிலும் மாறி மாறி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோ, மாறி மாறி கட்சி தாவுவதோ தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அ...
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை கோரியுள்ளது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச...
அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – ...