வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 

58ee044fc8bd6-IBCTAMIL Tuesday, November 14th, 2017

வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வலியுறுத்தி நாளை புதன்கிழமை(15) யாழ். மாவட்டச் செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143 நாள் போராட்டத்தையடுத்துப் பட்டதாரிகளைப் பயிற்சி  அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இவ் வருடத்திற்குள் நியமிப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால், எமது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை நியமனங்களை வழங்குவதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இதனால், மீண்டும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது  கலந்து கொள்ளுமாறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் வரும் அவமதிப்புகளுக்கு தராதரம் பார்க்காது தண்டனை – ஜனாதிபதி!
சீ.வீ.கே . சிவஞானம் ஒரு சந்தர்ப்பவாதி -  கஜேந்திரகுமார் கடும் சாடல்!
பெப்ரவரி 10 இல் உள்ளாட்சித் தேர்தல் - தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் !
வலி. வடக்கில் அதிபர்களுடன் மாத்திரம் இயங்கும் 5 பாடசாலைகள் - பெற்றோர் கவலை !
மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் - ஜனாதிபதி!