வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

Tuesday, February 20th, 2018

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக 19ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வேலையற்ற பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பயிற்சிஅடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைவில் பெறுதல் பற்றி நடைபெறவுள்ளதால் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டவேலையற்ற பட்டதாரிகளையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 2017 இல் வெளியேறிய புதிய வேலையற்ற பட்டதாரிகளுக்கான பதிவுகளும் இடம்பெறும்.

இதன் போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாணவேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அறிவித்துள்ளனா்.

Related posts: