வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது –  சம்பிக்க

Wednesday, June 21st, 2017

வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும் வடக்கில் வாழ முடியும்.  ஆகவே வடக்கை தமி­ழர்கள் உரிமை கோர முடி­யாது என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்துள்ளார்

சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த முன்னர் வடக்கில் தமி­ழர்­களின் இன­வாத செயற்பாடு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற போதே அவர் மேற்கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் வடக்கு மாகாணம் தனித்த மாகாணம் அல்ல. இலங்­கையின் ஏனைய பகு­தி­களை போலவே வடக்கும் அனைத்து தரப்­பி­னரும் வாழ்ந்த ஒரு  பூமி­யாகும். அவ்­வாறு இருக்­கையில் வடமா­காணம் மாத்­திரம் தமி­ழர்­க­ளுக்கு சொந்­த­மான பூமி­யென கூற முடி­யாது. வடக்கில் யுத்தத்தின்  போது  ஏற்­பட்ட நிலை­மை­களே அங்­கி­ருந்து சிங்­கள, முஸ்லிம் மக்­களை வெளி­யேற்ற கார­ண­மாக அமைந்­தன. வடக்கு தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல. தமி­ழர்­க­ளுக்கு என வடக்கை உரிமை கேரா முடி­யாது.  அங்கு சகல மக்­களும் வாழ்ந்­துள்­ளனர். யுத்­தத்தின் பின்னர் காணி விடுவிப்பு விட­யத்தில் தமிழர் வாழ்ந்த இடங்­களில் அவர்­களை வாழ அனு­ம­திக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்­க­ளுக்கும் சம உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். அங்கு சிங்­கள மக்­களும் முஸ்லிம் மக்­களும் தைரி­ய­மாக செயற்­பட  உரிமை உள்ளது. மேலும் சிங்­கள பெளத்த கருத்­துக்­களை இன­வாதக் கருத்­துக்­க­ளாக தெரி­வித்து ஊடகங்களும் தமிழ், முஸ்லிம் அர­சியல் வாதி­களும் கூறு­கின்­றனர். ஆனால் தமி­ழர்­களின், முஸ்லிம்­களின் இன­வாத கருத்­துகள் வெளி­வ­ரு­வ­தில்லை. ஊட­கங்­களும் இன­வாத கருத்­துக்­களை தவிர்த்து  செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

எமது கருத்­து­களை இன­வாத கருத்­தாக தெரி­விக்கும் நபர்கள் தமிழ் இன­வாத கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். உண்­மை­களை சரி­யாக தெரி­விக்க வேண்டும். வடக்கில் பரப்­பப்­பட்டு வரும் இன­வாத கருத்­துக்­களை மறைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. சிங்­கள மக்­க­ளுக்கு உண்மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும்.  அமைச்­சர்­க­ளாக இருந்­தாலும் சரி அல்­லது அரச அதிகாரிக­ளாக இருந்­தாலும் சரி எவர் இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பி­னாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இனவாதிகளுக்கு சலுகைகள் இல்லை. நாட்டின் நல்லிணக்கம் என்பது சகல தரப்பினர்  மூலமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   மாற்றாக ஒரு சாராரை மாத்திரம் குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்  என்றார்.

Related posts:

வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெர...
சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!