வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கடன் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Thursday, March 15th, 2018

அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் போது வடக்கு மாகாணத்திற்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குவதற்குரிய கடன் திட்டத்திற்கான முதலாவது கட்டம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கடன் வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு என அரசால் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதலாவது கட்டம் இம் மாதத்துக்குள் ஆரம்பித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அந்தந்த கிராமிய வங்கிகள் ஊடாக வழங்கப்படும்.

அதனைவிட மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு கிராமிய வங்கிகள் ஊடாக 3 மில்லியன் ரூபா வழங்கப்படும்.

இந்தக் கடன் திட்டத்தில் கூடுதலாக 75 வீதமானவை பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பாக போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு இந்த கடன் வசதிகள் அதிகரிக்கவும் ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கடன் வழங்கும் திட்டங்களை சம்பந்தப்பட்ட சங்கங்கள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தை பரவலாக நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் 2 ஆம் கட்ட நிதி உதவியை அரசாங்கம் சங்கங்களுக்கு வழங்கும்.

Related posts: