வடக்கு மாகாண அமைச்சரவை சட்ட ரீதியாக இல்லை – சட்டவட்டாரங்கள் !

Wednesday, July 4th, 2018

டெனீஸ்வரன் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு காரணமாக வடக்கு மாகாண சபையில் தற்போது சட்டரீதியான அமைச்சரவை ஒன்று செயற்பாட்டில் இல்லை என சட்டவட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசமைப்பு ஏற்பாடுகளின்படி ஒரு மாகாணசபைக்கு முதலமைச்சர் உட்பட ஐந்து பேரே அமைச்சர்களாக இருக்க முடியும்.

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சேர்ந்து ஐந்துக்கும் அதிகமாக ஆறு பேர் அல்லது ஏழு பேர் இப்போது வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்ற சாரப்பட நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருப்பார்களாயின் அது அரசமைப்பை மீறிய செயற்பாடு. அத்தகைய அமைச்சரவை சட்ட ரீதியானது அல்ல.

நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்ட ஆளுநர் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான நடவடிக்கை எடுத்து அரசமைப்பு ஏற்பாடுகள், மட்டுப்படுத்தல்களுக்கு அமைவாக அமைச்சரவையை சீர்செய்யும் வரை இப்போதிருக்கும் அமைச்சர் வாரியம் சட்டப்படியானது அல்ல.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றம் உத்தரவு வழங்கிய நேரத்திலிருந்து நிலைமை இதுதான். இப்படி அந்த சட்டவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Related posts: