வடக்கு மாகாணத்துக்குட்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இடமாற்றம்!

Saturday, March 17th, 2018

வடக்கு மாகாண வலயக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றி வந்த இலங்கைக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றி வந்த இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இவர்கள் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் தமது புதிய கடமை நிலையங்களில் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுவருகின்றனர்

வருடாந்த இடம் மாற்றத்தின் நிமித்தம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் மேற் கொள்ளப்பட்டட இந்த இடமாற்றங்கள் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு பின் தள்ளி போடப்பட்டிருந்தன. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து கடந்த 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது .

என். கந்ததாசன் தென்மராட்சி கல்வி வலயத்தில் இருந்து வடக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் (கல்வி அபிவிருத்தி ) ஜி. ஆதவன் முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வலிகாமம் கல்வி வலயம் கல்வி நிர்வாகம் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் எஸ்.மாணிக்கராசா யாழ்ப்பணக் கல்வி வலயம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அபிவிருத்தியிலிருந்து பிரதிக் கல்விப் (நிர்வாகம்) பணிப்பாளராகவும் ரி.பால்ராஜ் மடு கல்வி வலயத்திலிருந்து யாழ்ப்பாண கல்வி வலயம் முகாமைத்துவம் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் ஆர்.ஹம்சத்தணி துணுக்காய் கல்வி வலயத்திலிருந்து  வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கும் ,எஸ்.சரவணபவன் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இருந்து யாழ்ப்பாண கல்வி வலயம் கணிதம் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கே. விக்னரூபன் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இருந்து வலிகாமம் கல்வி வலயம் கணிதம் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இடமாற்ற நியமனம் பெற்றுள்ளனர்

Related posts: