வடக்கு – கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம்!

Wednesday, July 26th, 2017

பாதுகாப்புப் படை முக்கியஸ்தர்கள், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது..

இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும்  பாதுகாப்புத் துறைசார்ந்தோர் பற்றி வெளிநாடுகளில் தவறான கருத்துக்கள் நிலவுமாயின், அவற்றை சரி செய்வது அவசியம் என்றும் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இதன் போது தெரிவித்தார்கள்.

இந்தச் சந்திப்பில் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ஆணைக்குழுவின் மேலதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  இலங்கை பாதுகாப்புத் துறைசார் நிபுணத்துவ அறிவை வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்வது பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்புத் துறைசார்ந்தோருக்கான வெளிநாட்டுப் பயிற்சிகளை சீராக்குவது பற்றியும் அங்கு ஆராயப்பட்டது.

Related posts: