ரஷ்ய அதிகாரிகள் இலங்கை தேயிலை தொடர்பில் திருப்தி! 

tea Tuesday, February 13th, 2018

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வு அதிகாரிகள் இலங்கையின் தேயிலை உயர்தரத்தைக் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையின் தேயிலையின் தரம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவிப்பதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடந்த 4ஆம் திகதி வருகை தந்த இந்த அதிகாரிகள் விவசாய பணிப்பாளர் நாயகம் இலங்கையில் சிறந்த தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களின்நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் தேயிலை தொழிற்சாலைகளையும் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையின் தேயிலை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு ரஷ்யாவில் தேயிலை சந்தையைமேலும் விரிவுபடுத்துவதற்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இலங்கை தேயிலை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!