யுக்ரைனில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மேலுமொரு இந்திய மாணவர்!

Friday, March 4th, 2022

யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்த மாணவர் நகர மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்..

முன்பதாக யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதலில் கேரள மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யுக்ரைனில் இருந்து மேலும் 1,700 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கீவ் தலைநகரில் உள்ள இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: