யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்!
Saturday, July 14th, 2018யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண மருத்துவர் மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் அண்மையில் வடமாகாண மருத்துவர் மன்றம் மற்றொரு சந்திப்பை நடத்தியிருந்தது.
இந்தச் சந்திப்பின்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஆதித்தனை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நியமிக்க அமைச்சர் ராஜித உறுதியளித்தார்.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு – பொது நிர்வாக அமைச்...
|
|