யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் இருவர் விடுதலை 

Friday, April 28th, 2017

யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆம்,12 ஆம் சந்தேகநபர்கள் இன்று வெள்ளிக்கிழமை(28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் ஜோய் தமிழ் மகாதேவா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் விடுவித்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி இரு சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த-2015 ஆம் ஆண்டு மேமாதம் புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆம், 12 ஆம் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளமை வித்தியா படுகொலை வழக்கில் திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை இலங்கை பூர்த்தி செய்யுமானால் ...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜானக வக...
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் - உபகுழுவின் தலைவ...