யாழ்ப்பாண இளைஞன் டுபாயில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அல்லாரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை டுபாயில் உயிரிழந்தார்.
காய்ச்சலே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. சுதந்திரலிங்கம் தினேஸ் (வயது ௲ 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடினார், என்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் அவரை குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயற்சித்த போது முடியவில்லை என்றும், இளைஞருடன் இருந்த நண்பர்கள் மூலம் அவர் உயிரிழந்தமை தெரிய வந்தது என்றும் கூறப்பட்டது. இளைஞரின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் இந்திய பிரதமர் மோடி!
இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்கிறது - எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு...
கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை!
|
|