யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுச்சம்பவங்கள் அச்சத்தில் உறைந்த மக்கள்!

Tuesday, January 16th, 2018

யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் நேற்று அரங்கேறியது. இதனால் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். நேற்று இரவு கொக்குவில்,ஆனைக்கோட்டைப் பகுதிகளில் நடாத்தப்பட்ட வாள் வெட்டுச்சம்பவத்தில் 3 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன்   வாகனங்களும் அடித்து நொருக்கி சேதமாக்கப்பட்டுள்ளது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 இற்கும் மேற்பட்டவர்களினாலேயே மேற்படி வாள்வெட்டுச்சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்;.

இதே வேளை நேற்று இரவு 8 மணியளவில் கொக்குவில் மேற்கு வராகி கோவிலடிப் பகுதிக்கு வந்த குறித்த வாள் வெட்டுக்கழுக்கள் அங்கிருந்த இளைஞர்கள் மீதும் வாள்களை வீசியுள்ளது. இருப்பினும் அங்கிருந்த இளைஞர்கள் சுதாகரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்றன்றுள்ளனா.;

இதனால் வாள்வெட்டுச் குழுக்கள் அங்கு நின்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நொருக்கியதுடன் அதன்மீதும் வாளால் வெட்டி நாசம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள கொக்குவில்  கேணியடிப் பகுதியால் சென்ற வாள் வெட்டுக்குழு வீதியால் சென்ற ஒருவர் மீதும் வாள்வெட்டு நடாத்தியுள்ளது.

அங்கிருந்து காந்திஜீ பகுதிக்கு சென்ற வாள்வெட்டுக்ககுழு அங்கு நின்ற இரு இளைஞர்கள் மீதும் வாள்வெட்டு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதன் பின்னர் ஆனைக்கோட்டைப் பகுதிக்குச் சென்ற வான்வெட்டுக் குழு அங்கு நின்ற இளைஞர்கள் மீதும் வாள்வெட்டு நடாத்த முற்பட்;டுள்ளது. இருப்பினும் அங்கிருந்தத இளைஞர்களும் தப்பி ஓடியதை அடுத்து அங்கிருந்தும் அக்குழு புறப்பட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியான வாள்வெட்டுக்கள் நடைபெற்றமை தொடர்பில் பொலிஸாருக்கு  தகவல் கொடுக்கப்பட்ட போதும் பல மணி நேரங்கள் கழித்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: