யாழில் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

Friday, December 22nd, 2017

 

2017.12.06 ஆம் திகதிய 2048/30 இலக்க வர்த்தமானிய அறிவித்தலின் பிரகாரம் தேங்காய் ஒன்றின் அதி உச்ச சில்லறை விலையாக ரூபா.75.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச் சில்லறை விலைக்கு மேலதிகமாக உற்பத்தியாளர் இறக்குமதியாளர் பொதிசெய்பவர் விநியோகஸ்தர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ விற்பனைக்கு விடவோ விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளையின்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனை சகல வர்த்தகர்களும் பின்பற்றுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார்.

Related posts:

இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் உடனடியாக அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள் - வடக்க...
இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு - கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்...
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்க அரசாங்கம் நடவடிக்கை!