மோடியை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, May 13th, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று இரவு சந்தித்து, பல ஆண்டுகளாக  தொடரும் இருதரப்பு ஒத்துழைபுத் தொடர்பில்  பாராட்டுக்களைத் தெரவித்தார்.

 ராஜபக்ஷவிற்கும் மோடிக்கும் இடையேயான  சந்திப்பு சுமூகமாகவும் சுவாரசியமாகவும் இருந்ததாகவும்  பல ஆண்டுகளாக இந்தியா-இலங்கையுடன்  ஒத்துழைப்புடன் செயல்படுவதையிட்டு முன்னாள் ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங்  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இறுதி நேர கோரிக்கையை அடுத்தே ராஜபக்சவை மோடி சந்தித்தார்  எனவும் தெரவித்த உயர் ஸ்தானிகர் மோடியின் . இலங்கை வருகைக்கு முதல் நாள்   இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும்  இடையில் கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தம் தொடர்பில்  ராஜபக்ஷ தெரிவித்த கருத்துகளையும் நினைவு படுத்தினார்.

 இரு நாடுகளின் என்னைத் தேவைகளை நிவர்த்தி  செய்யும் நோக்கில் கிழக்கு துறைமுக மாவட்டமான  திருகோணமலையில் உள்ள என்னைக் தொட்டிகளை இந்தியா குத்தகைக்கு எடுக்கும் ஒரு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடுகின்றன. இதற்க்கு ராஜபக்ஷவின் கூட்டு எதிர்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளும் ஸ்ரீ சேனா அரசாங்கம் நாட்டின்  சொத்துக்களை விற்று வருகிறது எனக் கூறி இந்தியாவுடனான இந்தப் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிகையை எதிர்கின்றனர் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோடியின் விஜயத்திற்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை ஆனால் இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தங்கள்  தொடர்பிலேயே பிரச்சினை இருக்கிறது  என மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் தெரிவித்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Related posts: