மே முதலாம் திகதி முதல் நிலத்தடி நீர் பாவனைக்கு கட்டுப்பாடு !

நிலத்தடி நீர்க்கிணறுகளை தோண்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்ட செயல்பாடுகளை அரச அதிகாரிகள் விரிவு படுத்த உள்ளதாகவும் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதிக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் போன்றவற்றை பயன்படுத்தும் தனியார் வியாபாரிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேசிய நீர் வளங்கள் அதிகார சபை விடுத்துள்ள பகிரங்க அறிவித்தல் ஒன்றில் தெரிவிக்க்கப் பட்டுள்ளது.
நிலத்தடி இமற்றும் மழை நீரை பெருமளவில் பயன்படுத்தும் கூடுதலான தனியார் வியாபாரிகள் குளிர் பானங்கள் மற்றும் போத்தல் நீர் போன்றவற்ரிற்கே இதனை பயன்படுத்துகின்றனர்.இது போன்ற அதிகப் படியான நிலத்தடி நீர் பாவனையானது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் எனவும் இதனால் உற்பத்தி துறைகள் பெரிதும் பாதிப்படையும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் கட்டப் பட்டுள்ளது.
இதனால் நிலத்தடி இமற்றும் மழை நீரை பயன்படுத்தும் அணைத்து நிறுவனங் களும் வரும் மே மதம் முதல் கடுமையான பல சட்ட நடை முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தேசிய நீர் வளங்கள் அதிகார சபை யின் அறிவித்தலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எதிர் காலத்தில் குழாய் கிணறுகள் தோண்டுவதே தடை செய்யப்படலாம் என தெரிவிக்கின்றனர் அவதானிகள் .
Related posts:
|
|