முல்லைத்தீவு கடலில் படியும் மர்மம் ? – சுனாமி ஆபத்தா?

Tuesday, August 20th, 2019

முல்லைத்தீவு நாயாருவில் இருந்து கொக்கிளாய் வரையிலான கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ள நிலையில், கரைக்கு அலை வந்து சென்றதன் பின்னர் கடற்கரையில் கறுப்பு நிறத்தில் தார் போன்ற கரையில் படிந்து விடுகின்றது. அந்த தார் போன்ற மர்ம பொருள் மீண்டும் அலையில் சிக்கி கடலுக்கு செல்லாமல் இருப்பதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பு நிறத்திலான இந்த திரவம் பாதங்களில் பட்டால், அதனை நீக்குவது சிரமமாகும். அத்துடன் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முல்லைத்தீவு கடல் நீர் மட்டம் 5 அடி உயர்வடைந்த நிலையில் சுனாமி அச்சம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும் இது தொடர்பில் கொழும்பில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் மற்றும் கடல் ஆய்வாளர்கள், கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: