முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது..

Sunday, June 18th, 2017

எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

அகிய இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சில முச்சக்கர வண்டிகளின் சங்கம் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகிய இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சுதில் ஜயருக் தெரிவித்தார்

எவ்வாறாயினும், முச்சக்கர வண்டிகளில் உதிரிபாகங்களில் விலை அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகள் காரணமாக முச்சக்கர வண்டியின் முதல் கிலோ மீட்டருக்கான கட்டணம் அடுத்த மாதம் 10ஆம் திகதியில் இருந்து 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை சுயதொழில் வாய்ப்பு தொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: