மீன்பிடி சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Thursday, January 25th, 2018

வெளிநாட்டு மீனவ படகுகளை கட்டுபடுத்தும் நோக்கில் மீன்பிடி சீர்திருத்த சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம்  இலக்க 59ம் சரத்தின் கீழ் வெளிநாட்டு மீனவ படகுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மீன்பிடி சீர்திருத்த சட்டமூலம்ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டின் கடல் எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும் இந்த நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த சட்டமூலம் சீர்திருத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த மீன்பிடி சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் சீர்திருத்தப்படும் என்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: