மீண்டும் சிக்கலில் சீனாவின் கொழும்பு துறைமுக நகரம்!

Tuesday, May 2nd, 2017

சீன அரசினால் கொழும்பு காலிமுகக் கடல் பரப்பில் அமைக்கப் பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரப பணிகளில் ஈடுபட்டுவரும் சீன நிறுவனம் புதிய சட்ட சிக்கல் ஒன்றை எழுப்பியுள்ளதாக கொழும்பு டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரக் கட்டு மானப் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்தின் இலங்கைப்  பொறுப்பாளரான லியாங் தோ மிங் என்பவர் இந்தியாவின் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றை மேற்கோள்  காட்டியே இந்த செய்தி பிரசுரிக்கப் பட்டுள்ளது.

அமையவிருக்கும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு தனியான நீதிமன்றமும், மாறுபட்ட நீதிக் கட்டமைப்புகளும் உருவாக்கப்   படவேண்டும்  எனவும்  துறைமுக நகரமானது கொழும்பு நகரைப்போலல்லாது மாறுபட்ட நிர்வாகக் கடமைப்பையே கொண்டிருக்கும் எனவும் லியாங் தோ மிங் அவர்கள் அந்தச் செவ்வியில் தெரவித்திருந்தார்.

நாட்டின் இறைமையை மீறும் விதத்திலான சீனப் பிரதிநிதியின் இந்தக் கருத்து தொடர்பில்     அரசின் பல அமைச்சர்களும் நாடாள உறுப்பினர்களும் அபிவிவிருத்தி உத்திகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் தமது எதிர்பை வெளிப் படுத்தி உள்ளனர்.

இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக  வட்டாரங்களும்  கொழும்பு துறைமுக நகரத்திற்கு தனியான நீதிமன்றமும், மாறுபட்ட நீதிக் கட்டமைப்புகளும் என்பது இந்தப் பிராந்தியத்தில் பல இராஜாங்க அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரவித்த இலங்கை அரசின் உயர் மட்ட பேச்சாளர் ஒருவர் இதுவரை எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப் படவில்லை எனவும் இது தொடர்பில் சீன அரச பிரதிநிதிகளுடன் உயர் மட்ட பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts: