மீண்டும் அவகாசம் : நாளை தபால் மூல வாக்களிப்பு!

Wednesday, January 31st, 2018

நாளை(01) மற்றும் நளைமறுதினம்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார்.

தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தபால் மூல வாக்களிப்பை இதுவரை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம் அவர்களின் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சந்தர்ப்பம் தவறினால் நாளை மறுதினம் தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts: