மாணவர்கள் படுகொலை: நீதி கோரிய சர்வதேச மன்னிப்புச் சபை!

Saturday, January 27th, 2018

ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது

குறித்த ஐந்து மாணவர்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு காவல்துறை குழுக்களும், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோதும், சம்பவம் தொடர்பில் எவருக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், புதிய கோரிக்கை கடிதமான்றில் கைச்சாத்திடும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது

இந்தப் படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்க எதிராக வழக்கு தொடர வேண்டும். இதனூடாக குறித்த மாணவர்களின் குடும்பங்கள் இறுதியில் நீதியைப் பெறலாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Related posts: