மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி!

பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார்.
சமூகத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அதபோல மனிதர்கள் என்ற அடிப்படையில் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டியது அனைத்து இளைஞர்களுக்கும் சவாலாக உள்ளது.
பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களை ஊக்குவிப்பதுபோல சித்தியடையாத மாணவர்களின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பானவர்கள் செயற்படுவதைதவிர்ப்பது முக்கியமானதாகும். மாணவர்களுக்கு உயர் மதிப்பை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.
அதனூடாக சமூகத்தில் உள்ள பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்தங்களில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க பெற்றோர்களின் தலையீடு மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.
Related posts:
|
|