மாணவர்கள் சென்ற பேருந்து கடத்தப்பட்டு தீவைப்பு – இத்தாலியில் பதற்றம்!

இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறித்த பேருந்தின் சாரதி கடத்தி தீ வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் உள்ள சில மாணவர்கள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவர்களை பொலிசார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், 14 மாணவர்கள் மட்டும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இத்தாலி குடியுரிமை பெற்ற 47 வயதான குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக பேருந்தில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
|
|